சேலம் ஆற்றோரக் காய்கறி மார்க்கெட்டில் குவிந்துள்ள கழிவுகள். படம்: வி.சீனிவாசன் 
Regional01

குப்பை கழிவுகளை தினசரி அகற்ற வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சேலம் மாநகராட்சி பகுதியில் தினசரி குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாநகராட்சி பகுதிகளில் தினமும் 450 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், மாநகராட்சி மூலம் குப்பை கழிவுகள் தினசரி அகற்றுவதில்லை என்றும் இதனால், வீதிகளில் குப்பைகள் மலைபோல குவிந்துள்ளன. காற்றில் கழிவுகள் வீதிகளில் சிதறி பரவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறியதாவது:

சேலம் மாநகராட்சி பகுதியில் முக்கிய வீதிகள் மற்றும் பிரதான சாலைகளில் உள்ள குப்பை தொட்டிகளில் இருந்து கழிவுகளை தினசரி அகற்றுவதில்லை. இதனால், சாலைகளில் குப்பைகள் தேங்கி வருகிறது. பல வீதிகளில் குப்பை தொட்டிகள் இல்லை. இதனால், வீதிகளில் குப்பையை கொட்டும் நிலையுள்ளது.

சேலம் ஆற்றோரம் கடைவீதியில் காய்கறி கழிவு மற்றும் பொதுமக்கள் வீசி செல்லும் குப்பைகள் மலைபோல குவிந்து கிடக்கிறது. வாரத்துக்கு ஒரு முறை தான் மாநகராட்சி மூலம் குப்பைகள் அகற்றப்படுகிறது. இதனால், அப்பகுதி சுகாதாரமற்ற நிலையுள்ளது. எனவே, சேலம் மாநகரம் முழுவதும் தினசரி குப்பை கழிவுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT