Regional02

தலையில் காயம்பட்ட பெண்ணுக்கு ரத்தக்குழாய்களை இணைத்து 8 மணி நேர அறுவை சிகிச்சை கோபி அபி எஸ்.கே. மருத்துவமனை தகவல்

செய்திப்பிரிவு

இயந்திரத்தில் சிக்கிய பெண்ணுக்கு, கோபி அபி எஸ்.கே.மருத்துவமனையில் 8 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதையடுத்து அவர் நலம் பெற்றார்.

கோபியைச் சேர்ந்தவர் திவ்யா (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்தபோது, அங்கு இயங்கிய இயந்திரத்தில் தலைமுடி சிக்கியது. இதில் அவரது தலையில் இருந்த முடி சதையோடு கழன்று கீழே விழுந்து விட்டது. அவர் பலத்த ரத்த காயத்துடன் கோபி அபி.எஸ்.கே.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.மருத்துவமனை இயக்குநர் குமரேசன், மயக்கவியல் மருத்துவர் பரமேஸ்வரன் குழுவினர் அவருக்கு எட்டுமணி நேரம் அறுவை சிகிச்சை மேற் கொண்டனர். அறுவை சிகிச்சை வெற்றியடைந்ததையடுத்து அவர் தற்போது நலம் பெற்றுள்ளார்.

இதுதொடர்பாக அபி எஸ்.கே. மருத்துவமனை இயக்குநர் குமரேசன் கூறியதாவது:

தலையில் காயம்பட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட ரத்தப் போக்கை நிறுத்தி, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது தலையில் ஏற்பட்ட காயத்திற்கான அறுவை சிகிச்சையை மைக்ராஸ்கோப் மூலம் ரத்தக் குழாய்களை இணைத்து மிகவும் துல்லியமாக மேற்கொள்ளப்பட்டது. பெண்கள் வீடுகள், பொது இடங்களில் வேலை செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க முடியும், என்றார். 

SCROLL FOR NEXT