தஞ்சாவூர் மாவட்டம் திருவை யாறு ஓடத்துறை தெரு பகுதி ரங்கராஜ் காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் கார்த்திகா(5), காவிரி வடக்குக் கரையில் நேற்று முன்தினம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு கார், கார்த்திகா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், பலத்த காயமடைந்த கார்த்திகா அந்த இடத்திலேயே உயிரிழந்தார். திருவையாறு போலீஸார் விசாரிக்கின்றனர்.