உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் பணி தோட்டக்கலை மற்றும் மலை பயிர் கள் துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடங்கப்பட் டுள்ளது.
இதுகுறித்து வேளாண்மை துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "உழவர்களுக் கும், விரிவாக்க அலுவலர் களுக்கும் உள்ள தொடர்பை வலுப்படுத்தும் விதமாக தோட்டக் கலை துறை அலுவலர்கள் கிராமங்களுக்கு நேரில் சென்று நவீன தோட்டக்கலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் தோட்டக்கலை மானியத் திட்டங் களை விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கொண்டு சேர்க்கவும், பயிர் சாகுபடி நிலவரம் குறித்த தகவல்களை சேகரித்து அதற்கு ஏற்றார் போல அறிவுரைகள் வழங்கவும், விவசாயிகளிடையே ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி எடுத்துரைக்கவும் தமிழக அரசு ‘‘உழவர் அலுவலர் தொடர்பு’’ திட்டத்தை இந்தாண்டு முதல் செயல்படுத்துகிறது.
இத்திட்டத்தின் படி தோட்டக் கலை அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யப்படும் கிராம ஊராட்சிகளில் நிரந்தர பயணத்திட்டத்தின் படி 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் விவசாயிகள் மற்றும் உழவர் குழுக்களை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவர்கள், விவசாயிகளின் வயலில் தொழில்நுட்ப செயல் விளக்கங்கள், பண்ணை பள்ளிகள் மூலமும், நவீன தொழில் நுட்பங் களையும், திட்ட செயல்பாடு களையும் விவசாயிகளுக்கு தெரிவிப்பார்கள்.
முன்னோடி விவசாயிகள் தேர்வு
வட்டார அளவில் தோட்டக் கலை உதவி இயக்குநர் தலைமை யில் தமிழ்நாடு வேளாண் பல் கலைக்கழக விஞ்ஞானி, தோட்டக் கலை அலுவலர், துணை தோட்டக்கலை அலுவலர்களை உள்ளடக்கிய வட்டார தோட்டக் கலை விரிவாக்க குழு அமைக்கப் பட்டு ஒவ்வொரு மாதமும் கிராம பஞ்சாயத்து வாரியாக பயணத் திட்டத்தை வகுத்து செயல்படுத் தப்படும்.
பயணத்திட்டம் 6 மாதங் களுக்கு ஒரு முறை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ம் தேதி முன்பாக விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையில் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும்.
ஒவ்வொரு ஊராட்சியிலும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், அரசு அலுவலகம், கிராம பொது கட்டிடங்கள், முன்னோடி விவசாயிகள் இடங்களில் ஒரு தொடர்பு மையம் ஏற்படுத்தப்பட்டு, அந்த வார கூட்டம் குறித்த தகவல்களை ‘வாட்ஸ்- ஆப்’ அல்லது பிற சமூக வலைதளத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் வார தொடக்கத்திலேயே தெரிவிக் கப்படும்.
தனி செல்போன் செயலி
எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், ‘உழவர் அலுவலர் தொடர்பு’ திட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளை பெற்று பயனடைய வேண்டும்" என தெரிவித்துள்ளனர்.