Regional01

தே.கல்லுப்பட்டி அருகே சிறுமிக்கு திருமணம் மணமகனின் பெற்றோர் கைது

செய்திப்பிரிவு

தே.கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கடந்த செப். 30-ம் தேதி மங்கம்மாள்பட்டி கோயிலில் திருமணம் நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த டி. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய சமூகநல அலுவலர் ரத்தினமணி வி.சத்திரபட்டி காவல் நிலை யத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் சிறுமியைத் திருமணம் செய்த மங்கம்மாள் பட்டியைச் சேர்ந்த பிரபாகரன், அவரது தந்தை கருப்புச்சாமி (62), தாய் உமா (50) மற்றும் விருதுநகர் மாவட்டம், கம்மாப் பட்டியைச் சேர்ந்த உறவினர்கள் புனிதா, ரெங்கபாளையம் ஜீவா ஆகியோர் மீது போக்ஸோ சட்டத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் கருப்புச் சாமி, உமா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT