Regional02

மதுரையில் அடுத்தடுத்து இருவர் கொலை

செய்திப்பிரிவு

மதுரை மாட்டுத்தாவணி அருகில் நெல்மண்டி வளாகம் அருகே புதருக்குள் ஒருவர் உடல் கிடப்பது பற்றி அண்ணாநகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

காவல் ஆய்வாளர் பூமிநாதன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு ஆய்வு செய்தனர். இதில் அந்நபர் கட்டையால் தாக்கி கொலை செய்யப் பட்டிருப்பது தெரியவந்தது. அவரது செல்போனை ஆய்வு செய்தபோது, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகிலுள்ள முத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் (45) எனத் தெரியவந்தது. அவரது கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

மதுரை மாவட்டம், பன்னியான் கிராமத்தைச் சேர்ந்த மண்டையன்முத்து என்பவரின் மகன் செந்தில்(38). இவர், நேற்று மாலை பன்னியான் விலக்கு பகுதியில் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். செக்கானூரணி போலீஸார் அவரது உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT