Regional01

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ உபகரணம் வழங்கல்

செய்திப்பிரிவு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வியில் சேர்ந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 26 பேருக்கு சேலத்தில் பாராட்டு விழா மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, இணை இயக்குநர் (நலப் பணிகள்) மலர்விழி வள்ளல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு மருத்துவ உபகரணங்களை ஆட்சியர் ராமன் வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர்கள் சுமதி (சேலம்), ராஜகோபால் (சேலம் ஊரகம்), ராமசாமி (சங்ககிரி), விஜயா (எடப்பாடி) மற்றும் மாணவர்களின் பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அரசின் இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் ராமன் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி உள்ளிட்டோர். படம்: எஸ்.குரு பிரசாத்

SCROLL FOR NEXT