Regional03

உயிரிழந்த மகனை நினைத்து வாழ்ந்த தற்கொலை செய்த தம்பதி

செய்திப்பிரிவு

சேலத்தில் மூத்த மகன் இறந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட தம்பதி, தங்களின் இறந்த மகன் நினைவாகவே எப்போதும் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சேலம் அம்மாப்பேட்டை வாய்க்கால்பட்டறை வால்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (38). இவர் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள சலூன் கடையில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கோகிலா (35). இவர்களது மகன்கள் மதன்குமார் (17), வசந்தகுமார் (14), கார்த்திக் (10). மதன்குமார் கடந்த 6 மாதத்துக்கு முன்னர் புற்றுநோயால் உயிரிழந்தார்.

இதனால், சோகத்தில் இருந்த முருகன் குடும்பத்தினர் கடந்த 7-ம் தேதி தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக அம்மாப்பேட்டை போலீஸார் விசாரித்தபோது, முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர், மதன்குமார் இறந்ததை ஏற்க முடியாமல் சோகத்தில் இருந்ததோடு, எந்த நேரமும் அவரது நினைவுகளுடன் இருந்துள்ளனர்.

மேலும், மதன்குமார் வீட்டுக்கு வருவார் என எதிர்பார்த்து இரவில் வீட்டின் கதவை திறந்து வைத்தும், வீட்டு வாசலில் அலைபேசியின் வீடியோவை ஆன் செய்து வைத்துள்ளனர். இதில் ஒரு வீடியோ 2 மணி நேரம் 45 நிமிடம் பதிவாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த சோகத்தில் தான் முருகன் குடும்பத்தினர் தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

SCROLL FOR NEXT