Regional02

சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய மாநாடு

செய்திப்பிரிவு

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்சங்க ஒன்றிய மாநாடு அவிநாசியில் நேற்று நடைபெற்றது.

சங்கத்தின் ஒன்றியத் தலைவர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் கே.சக்தி, மாநில பொதுச் செயலாளர் நூர்ஜகான் ஆகியோர் பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்டஇணைச் செயலாளர் ராமன், ஒன்றியச் செயலாளர் கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் வரையறுக்கப் பட்ட ஊதியம் வழங்க வேண்டும், சட்டரீதியான குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், 25 மாணவர்களுக்கும் கீழ் செயல்படும் சத்துணவு மையங்களில் பணிபுரியும் அமைப்பாளர்களை பணியிடமாறுதல் செய்யும் நடவடிக் கையை அரசு கைவிட வேண்டும். குடும்ப ஓய்வூதியம் ரூ.8500 வழங்க வேண்டும்என்பன உட்பட பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

SCROLL FOR NEXT