விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் திமுக கூட்டணி கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களைதிரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளனர். இவர்களுக்கு ஆதரவாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பந்த் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். அதன்படி,விழுப்புரம் காந்திசிலை அருகில் திமுகதுணைப்பொதுச் செயலாளர் பொன்முடிதலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சாலையில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.இதே போல மாவட்டம் முழுவதும் 16 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் செஞ்சி, திருவெண்ணை நல்லூர், கூட்டேரிப்பட்டு, நாட்டார்மங்கலம் உள்ளிட்ட 22 இடங்களில் மறியலில் ஈடுபட்ட974 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கடலூர்
கடலூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் திமுக நகர செயலாளர் ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.சிதம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக நகர செயலாளர் செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் மூசா உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பரங் கிப்பேட்டை உள்ளிட்ட 8 இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போராட் டம் நடத்தினர். கடலூர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் 754 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சியில் பேரணி
கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக பொறுப்பாளரும், ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ-வுமான வசந்தம் கார்த்திக்கேயன் தலைமையில் கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடைபெற்றது. பேரணி அம்பேத்கர் சிலையருகே முடிவுற்றது.
இதேபோன்று திருநாவலூரில் திமுக ஒன்றிய செயலாளர் ஜி.ஆர். வசந்தவேல் தலைமையில் விவசாயிகளுக்கு ஆதர வாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கராபுரத்தில் திமுக சார்பிலும், எலவனாசூர் கோட்டை மற்றும் சின்னசேலத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மறிய லில் ஈடுபட்ட சுமார் 350 பேரை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
பண்ருட்டியில் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் திமுக நகரச் செயலாளர் பலராமன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.