Regional01

கால்நடைகளை பாதுகாக்க சிறப்பு முகாம்

செய்திப்பிரிவு

மதுரை ஆனையூர் கால்நடை மருந்தகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை மேற்கு ஒன்றியம் பேச்சிகுளம் ஊராட்சிக்குட்பட்ட கீழப்பனங்காடி கிராமத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு பாதுகாப்பு முகாம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றியத் தலைவர் ராஜலெட்சுமி வாசு தலைமை வகித்தார். இதில் கால்நடைகளுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கால்நடை உதவி இயக்குநர் டாக்டர் என்.ஆர்.சரவணன் மேற்பார்வையில் கால்நடைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனையூர் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் தேன்மொழி, கால்நடை ஆய்வாளர் பாலமுருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT