Regional02

தளி, சூளகிரியில் கனமழை

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் நேற்று கன மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை கிருஷ்ணகிரி, தளி, போச்சம்பள்ளி உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பகல் முழுவதும் மிதமான மழை காணப்பட்ட நிலையில், மாலை 5.30 மணி முதல் 6.15 வரை கனமழை பெய்தது. மழையால் சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது.

நேற்று காலை 7 மணி நிலவரப்படி மழையளவு (மில்லிமீட்டரில்) வருமாறு: தளியில் 15மிமீ, சூளகிரி 10, நெடுங்கல் 9.2, போச்சம்பள்ளி 8.2, ஊத்தங்கரை 6.2, பாரூர், தேன்கனிக்கோட்டை, ஓசூர் பகுதிகளில் 4 மிமீ மழை பதிவாகி இருந்தது. கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 235 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 174 கனஅடியாகவும் இருந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 50.25 அடிக்கு தண்ணீா் தேக்கி வைக்கப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT