Regional02

ஆன்லைனில் ரம்மி விளையாடினால் சிறை தண்டனை

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பணம்வைத்து விளையாடப்படும் ‘ஆன்லைன்ரம்மி' போன்ற இணையவழி விளையாட்டுகள் தடை செய்யப்படும் என முதல்வர்அறிவித்ததிற்கிணங்க, அவசரச் சட்டம்பிறப்பிக்கப்பட்டு, 21.11.2020-ம் தேதியிட்ட அரசு சிறப்பிதழில் வெளியிடப்பட்டுஉடனடியாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

எனவே, இனிவரும் காலங்களில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழிவிளையாட்டுகளில் பணம் வைத்து விளையாடுபவரும், இவ்விளையாட்டைநடத்துவோரும், அவசர சட்டப்படி உரியஅபராதத்துக்கும், சிறை தண்டனைக்கும் ஆளாக்கப்படுவதோடு, இவ்விளையாட்டில் ஈடுபடுத்தப்படும் கணினிகளும்மற்ற கருவிகளும் பறிமுதல் செய்யப்படும்.

இதுதொடர்பான இணையவழி பணப்பரிமாற்றங்கள் தடுக்கப்படும். இவ்விளையாட்டை நடத்தும் நிறுவனங்களின்மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனதெரிவிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT