Regional02

தூத்துக்குடி மாவட்டத்தில் 2021- 22-ம் ஆண்டில் விவசாயத்துக்கு ரூ.3,606 கோடி கடன் நபார்டு கடன் திட்ட அறிக்கை வெளியீடு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் 2021-2022-ம்ஆண்டுக்கு நபார்டு வங்கியின் வளம் சார்ந்தகடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டார். மாவட்டத்தில் அடுத்த நிதியாண்டில் ரூ.8,000 கோடி அளவுக்கு கடன் வழங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ஊரக வளர்ச்சிப் பணியில் முக்கியப் பங்கு வகிக்கும் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி ( நபார்டுவங்கி) தூத்துக்குடி மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் 2021- 2022-ம் ஆண்டில் ரூ. 8000.02 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளதுஎன மதிப்பீடு செய்துள்ளது. இது நடப்பாண்டை விட அதிகமாகும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நபார்டு வங்கியின் 2021-2022-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் பேசியதாவது:

2021-2022-ம் ஆண்டுக்கு பயிர் கடன் ரூ.2,344.90 கோடி, விவசாய முதலீட்டுக் கடன்ரூ.300.15 கோடி, விவசாய கட்டமைப்பு கடன்ரூ.162.92 கோடி, விவசாய இதர கடன்கள்ரூ.137.23 கோடி வழங்கப்படும் இதில் விவசாயத்துக்கு மட்டும் ரூ.3,606.32 கோடி இருக்கும் .

சிறு, குறு, நடுத்தர தொழில் கடன் ரூ.2,615.85 கோடி, ஏற்றுமதி கல்வி மற்றும் வீட்டுவசதிக்கான கடன் ரூ.1,349.25 கோடி, அடிப்படைகட்டுமான வசதி கடன் ரூ.97.40 கோடி,சுய உதவிக் குழுக்களுக்கான கடன் அளவுரூ.331.20 கோடி உட்பட மொத்தம் ரூ.8,000.02 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளதென மதிப்பீடு செய்து கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, முன்னோடி வங்கி மேலாளர் யோகானந்த், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சுரேஷ் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT