பாஜக சார்பில் திருச்செந்தூரில் நேற்று மாலை நடைபெற்ற வேல்யாத்திரை நிறைவு விழாவில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நினைவுப்பரிசு வழங்கினார். உடன், பாஜக மூத்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, நடிகை குஷ்பு, அண்ணாமலை உள்ளிட்டோர். (அடுத்த படம்) விழாவில் பங்கேற்ற தொண்டர்கள்.படங்கள்: என்.ராஜேஷ்
“எம்ஜிஆர்போல் நாட்டு நலனுக் கான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி வருகிறார்” என மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.