குன்னூர்-மேட்டுப்பாளையம் ஈச்சமரம் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு. 
Regional02

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை; குன்னூர் மலைப்பாதையில் மண் சரிவு சாலையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உதகை-கூடலூர் சாலை உட்பட பல இடங்களில், 10-க்கும் மேற்பட்ட ராட்சத மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் உடனுக்குடன் மரத்தை அகற்றியதால், போக்குவரத்து சீரானது.

எமரால்டு, இத்தலார், எடக்காடு, பிக்கட்டி, குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் ஈச்சமரம் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. பகல் நேரங்களி லேயே கடும் குளிர் நிலவுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை, 8 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக எடப்பள்ளியில் 59 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மழையளவு (மில்லி மீட்டரில்): குன்னூரில் 50.5, கோடநாட்டில் 36.5, கோத்தகிரியில் 35, உதகையில் 34, குந்தாவில் 33, கிண்ணக்கொரை மற்றும் பர்லியாறில் தலா 30, கெத்தையில் 28, கேத்தியில் 26, கிளன்மார்கனில் 23, அவலாஞ்சியில் 21 மி.மீ., மழை பதிவானது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

SCROLL FOR NEXT