Regional02

தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து பொது ஓடையை மீட்க கோரிக்கை

செய்திப்பிரிவு

திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் அலுவலகத் தில், மாநகராட்சி 3-வது வார்டு தியாகி குமரன் காலனி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அளித்த மனுவில், "திருப்பூர் தியாகி குமரன் காலனி மற்றும் மேற்கு அன்னையம் ஆகிய பகுதிகளுக்கு இடையில் பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்திவரும் பொது நீரோடை மற்றும் சுடுகாடு பகுதிகள் தனியாரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளது.

மேற்குறிப்பிட்ட சுடுகாட்டைதியாகி குமரன் காலனி, ஒட்டர்பாளையம், அன்னைய பாளையம், விஜயபுரி கார்டன் பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆக்கிரமிப்பில் இருந்து நீரோடை மற்றும் சுடுகாட்டை மீட்டுத் தர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT