Regional01

பலத்த மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி மக்கள் மறியல்

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி அருகே கனமழை யால் சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி அருகே மந்தை வெளியை அடுத்த தென்கீரனூர் கிராமத்தில் கனமழையால் சாலை சேறும் சகதியுமாக மாறி யுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்று மந்தைவெளிப் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் சையத் காதர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து அலு வலர்களை வரவழைத்து சாலை யை சீரமைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மறியல் போராட் டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

கனமழையால் சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளது.

SCROLL FOR NEXT