மத்திய அரசு கல்வி உதவித்தொகையை குறைக்க எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
Regional02

மத்திய அரசை கண்டித்து விடுதலைச் சிறுத்தை ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

மத்திய அரசு எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தை கைவிடக்கூடாது. இதற்கு தகுதியை மறைமுகமாக நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆற்றலரசு தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக எம்பி ரவிக்குமார் பங்கேற்று கண்டன உரையாற்றினார். இதே போல் திண்டிவனத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் இமயவன் தலைமையேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சேரன் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

SCROLL FOR NEXT