Regional02

சுவர் இடிந்து மூதாட்டி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

விழுப்புரம் அருகே சிறுவானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகள் வள்ளிநாயகம் (70). பார்வையற்ற இவர் தனித்து வசித்து வந்தார். கனமழையால் இவரது கூரைவீட்டின் பக்கவாட்டு சுவர் நேற்று காலை இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிமூதாட்டி வள்ளிநாயகம் சம்பவஇடத்திலேயே உயிரிழந் தார். இதுகுறித்து திருவெண்ணை நல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT