Regional01

வங்கி பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

செய்திப்பிரிவு

வங்கி பணி தேர்வுக்கு இல வசமாகப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் ந.மகாலெட்சுமி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன் னார்வப் பயிலும் வட்டம் சார்பில் அனைத்துப் போட்டித் தேர்வு களுக்கும் இலவச பயிற்சி வகுப் புகள் நடத்தப்படுகின்றன.

தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அலுவலர் பதவிக்கான காலிப் பணியிட அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கான பயிற்சி வகுப்பு விரைவில் தொடங் கப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு 9698936868 என்ற எண்ணில் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.

SCROLL FOR NEXT