புதிய பாதுகாப்பு வாகனம் மற்றும் அலுவலர்களுடன் மதுரை விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன். 
Regional01

மதுரை விமான நிலையத்தில் நவீன ரோந்து வாகனம் கடத்தல், விபத்துகளின்போது துரிதமாக செயல்படும்

செய்திப்பிரிவு

மதுரை விமான நிலையப் பாதுகாப்பில் நவீன கருவிகளுடன் கூடிய புதிய வாகனம் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

விமான விபத்து மற்றும் கடத் தல் போன்ற சம்பவங்களைத் தடுக்கவும், துரிதமாகச் செயல் படவும் பயன்படும் புதிய ரோந்து வாகனத்தை மதுரை விமான நிலைய இயக்குநர் செந்தில் வள வன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

விமான நிலையத்திலோ அல் லது அருகிலோ விமானம் விபத்தில் சிக்கினால் துரிதமாகச் சென்று மீட்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த புதிய வாகனம் (mobile command post) பயன்படும். மதுரை விமான நிலையப் பாது காப்பில் இந்த புதிய வாகனம் இணைக்கப்பட்டுள்ளது.

ரூ. 43 லட்சத்தில் கண்காணிப்பு கேமரா, தொலைத் தொடர்பு வசதி, இரவு நேர தொலைநோக்கி, உயர் மின் அழுத்த விளக்குகள், அவசரகால ஆலோசனைக் கூட் டம் நடைபெறும் சிறிய கூடம் என பல நவீன வசதிகள் இந்த வாக னத்தில் உள்ளன.

அதிகாரிகள் தெரிந்துகொண்டு செயல்படுவதற்கு முன் விமான விபத்து அல்லது கடத்தலைத் தடுக்க முடியாத சூழல் ஏற்படு கிறது.

இதுபோன்ற சமயங்களில் இந்தப் புதிய வாகனத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ள தீயணைப்பு வீரர்கள் உட்பட 11 பேர் துரிதமாகச் செயல்பட்டு தடுக்கும் பணியில் ஈடுபடுவர். இதற்கேற்ப விமான ஓடுதளங்கள் மற்றும் விமானம் நிறுத்தக் கூடிய இடங்களில் வாகனம் ரோந்து சுற்றியபடி பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும். இதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும், என்று கூறினார்.

SCROLL FOR NEXT