புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்பட்ட இரட்டை இலை சின்னம் அச்சடிக்கப்பட்ட புறநோயாளிகள் சீட்டுகளுடன் மக்கள். 
Regional01

ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரட்டை இலை சின்னத்துடன் ஓ.பி சீட்டு வழங்கியதால் சர்ச்சை

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் மழையூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற நேற்று வந்தவர்களுக்கு வழங்கப்பட்ட புறநோயாளிகள் சீட்டுகளின் பின் பக்கத்தில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் அச்சடிக்கப்பட்டு இருந் தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் சிலரும், தகவலறிந்து வந்த எதிர்க்கட்சியினரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் தரப்பில் கூறியபோது, “சுகாதாரத் துறை வழங்கிய புறநோயாளிகள் சீட்டு தீர்ந்துவிட்டதால், தனியார் அச்சகத்தில் அச்சடிக்க கொடுக் கப்பட்டது. அவர்கள் உள்ளாட் சித் தேர்தலில் ஒரு அதிமுக வேட் பாளருக்காக அச்சடித்த துண் டறிக்கையின் மறுபுறத்தில் புறநோ யாளிகள் சீட்டை அச்சடித்து கொடுத்தது தெரியவந்துள்ளது. இனிமேல் அந்த சீட்டு பயன் படுத்தப்படமாட்டாது. வேறு சீட்டுகள் வழங்கப்படும்” என்றனர்.

SCROLL FOR NEXT