Regional02

சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் மனு

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் ‘புரெவி' புயலால் பெய்த கனமழை காரணமாக, பல இடங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. இந்நிலையில், ஒரத்தநாடு வட்டம் மேலஉளூர், கீழ உளூர் பகுதி களைச் சேர்ந்த விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர், தமிழக விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களின் ஒருங்கி ணைப்பாளர் ஜெகதீசன் தலை மையில், தண்ணீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிர்களுடன் நேற்று ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், ‘நிவர்' மற்றும் ‘புரெவி' புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்து, விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், எங்களின் வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த பயிர்களை ஆட்சியர் பார்வையிட்டு, உரிய முறையில் கணக்கெடுத்து, ஏக்க ருக்கு ரூ.50,000 இழப் பீடு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

SCROLL FOR NEXT