Regional01

கடலூர் மாவட்டத்தில் 90 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது அமைச்சர் தங்கமணி தகவல்

செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் பி.தங் கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நிவர் புயல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள மத்தியக் குழு தமிழகம் வந்துள்ளது.

நாளை (8-ம் தேதி)இக்குழுவினர் தமிழக முதல்வரை சந்திக்க உள்ளனர். புரெவி புயலை பொறுத்த வரை கடலூர் மாவட்டத்தில் அதிக மழை பெய்துள்ளது. மழைத் தண்ணீர் அதிகளவுதேங்கியுள்ளது. கடலூர் மாவட் டத்தில் 90 சதவீதம் மின்சாரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் மட்டும் மின்சாரம் நிறுத் தப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஆய்வு செய்து தண்ணீர் வடிந்த பின்னர் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக் கப்படும்.

பள்ளிபாளையம், குமாரபளையத்தில் பொதுசுத் திகரிப்பு நிலையம் அமைக்க நிலம் வாங்கி அதற்கான அனுமதிக்காக டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அனுமதி கிடைத்தவுடன் தமிழக முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ளார், என்றார்.

SCROLL FOR NEXT