உளுந்தூர்பேட்டையை அடுத்த பரியந்தல் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் மதன்(11). அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். சிறுவன் நேற்று விளையாடச் சென்றான். அப்போது, மழைநீர் தேங்கியிருந்த குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தான். தகவலறிந்த போலீஸார் சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதன் பின்னர் பெற்றோரிடம் உடலை ஒப்படைத்தனர்.
இதனிடையே நேற்று உளுந்தூர்பேட்டை பகுதியில் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்த விழுப்புரம் எம்பி ரவிக்குமார், சிறுவனின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.