மழை வெள்ள பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சிதம்பரம் அருகே குச்சிப்பாளையம் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
Regional02

மழை வெள்ள பாதிப்புக்கு உரிய நடவடிக்கை இல்லை சிதம்பரம் அருகே சாலை மறியல்

செய்திப்பிரிவு

காட்டுமன்னார்கோவில் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள், கடலூர், சிதம்பரத்தை சுற்றியுள்ள தலா 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள், குறிஞ்சிப்பாடி பகுதியில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடப்பதால் பொது மக்கள் பாதி்க்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடிய வில்லை. பலர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சிதம்பரம் கிள்ளை அருகே உள்ள குச்சிப் பாளையத்தில், மழை வெள்ள பாதுகாப்பு நடவடிக்கை எடுக் கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்று கிள்ளை கடை வீதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். திருவக்குளம் வரு வாய் ஆய்வாளர் செல்வம் சம்பவஇடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித் ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடிய வில்லை.

SCROLL FOR NEXT