செல்லூர் அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்தவர் அசோக் குமார். இவர் திருப்பாலை- உச்சப் பரம்பு மேடு சாலையில் கணினி மையம் நடத்தி வருகிறார். கடந்த 4-ம் தேதி மையத்தை மூடிவிட்டுச் சென்றார். அடுத்த நாள் வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே இருந்த கணினி, பிரிண்டர் இயந்திரம், மானிட்டர், மொபைல் போன், மடிக்கணினி, சிசிடிவி பிளேயர் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருந்தன.
இதுகுறித்து புகாரின்பேரில் தல்லாகுளம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.