அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு மதுரை அவனியா புரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் இன்குலாப் மாலை அணிவித்தார்.
அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர்சேரியில் உள்ள அம் பேத்கர் சிலைக்கு சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம் உள்ளிட்ட அதிமுகவினர் மாலை அணி வித்து மரியாதை செய்தனர். பின்னர், விடுதலைச் சிறுத்தை கள் கட்சியினர் ஊர்வலமாக ஊர்சேரிக்கு வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிர்வாகிகள் சிந்தனைவளவன், எல்லாளன் உள்ளிட்டோர் பங் கேற்றனர். இவர்கள் மீது அனு மதியின்றி ஊர்வலம் சென்றதாக அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.