Regional01

முதல்வரிடம் பாலியல் புகார் அளிக்க முயற்சி சுகாதார ஆய்வாளரை தேடும் போலீஸ்

செய்திப்பிரிவு

முதல்வர் பழனிசாமி கடந்த 4-ம் தேதி மதுரை வந்தார். அப்போது அவரிடம் மதுரை மாநகராட்சி ஒப்பந்தப் பெண் ஊழியர் ஒருவர் புகார் அளிக்கத் திட்டமிட்டார். இதற்காக அன்று காலை தல்லாகுளம் பகுதியில் முதல்வர் வருகைக்காகக் காத்திருந்தார்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், அப்பெண்ணிடம் விசாரித்தனர். அவர் மதுரை மாநகராட்சி சுகாதாரப் பிரிவில் ஒப்பந்த ஊழியர் என்பதும், சுகாதார ஆய்வாளர் ஒருவர் தன்னையும், தன்னுடன் பணிபுரியும் பெண்களையும் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் அதற்கு உடன்படாதவர்களை வேலையை விட்டு நீக்கி விடுவதாக மிரட்டுவதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து அந்தப் பெண் தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் ஒருவர் தற்காலிக பெண் ஊழியரிடம் விசாரித்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி சுகாதார ஆய்வாளரை போலீஸார் தேடியபோது அவர் தலைமறைவானது தெரிய வந்தது. அவரை தொடர்ந்து தேடிவருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT