Regional01

சேலத்தில் 11 ரவுடிகள் உட்பட 142 பேர் கைது

செய்திப்பிரிவு

சேலத்தில் ரவுடிகள், தலைமறைவு குற்றவாளிகள், குட்கா விற்பனை யாளர்கள் உள்ளிட்ட 142 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் மாநகரப் பகுதிகளில் ஆங்காங்கே ரவுடிகள் சிலர் பொதுமக்களுக்கு அச்சுறுத்த லாகவும், கட்டப் பஞ்சாயத்து களில் ஈடுபட்டு வருவதாகவும் போலீஸாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, மக்களின் அமைதிக்கும், உடைமை களுக்கும் அச்சுறுத்தலாக இருப்ப வர்களை அடையாளம் கண்டு, அவர்களை கைது செய்ய மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் மாநகர போலீஸார், மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் திடீர் சோதனை நடத்தினர். இதில், டவுன் பகுதியில் கார்த்தி, செவ்வாய்பேட்டை மகேந்திரன், பிரபு, ஜெகநாதன், தாதகாப்பட்டி டெனியா, ஜெகன், சூரமங்கலம் தட்சணாமூர்த்தி உள்ளிட்ட 11 ரவுடிகளை போலீஸார் கைது செய்தனர். மேலும், 4 தலைமறைவு குற்றவாளிகள், 10 பிடி யாணை குற்றவாளிகள், 24 குட்கா விற்பனையாளர்கள் உள்ளிட்ட 142 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேலம் மாநகரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் யாருக்கேனும் ரவுடிகளால் அச்சுறுத்தல், மிரட்டல் ஏதேனும் இருப்பின், தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையம் அல்லது மாநகர காவல் அலுவலகத்தை நேரில் அல்லது 100, 94981 00945 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT