Regional02

ஆம்னி பேருந்தில் எடுத்துச் சென்ற ரூ.5.25 லட்சம் மதிப்பு வெள்ளி நகைகள் திருட்டு

செய்திப்பிரிவு

சேலம் சிவதாபுரத்தைச் சேர்ந்தவர் வீரமணி (36). இவர் சேலத்தில் உள்ள வெள்ளி நகை கடையில் பணியாளராக உள்ளார். இவர் தான் பணியாற்றும் கடை நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் 26 கிலோ வெள்ளி நகைகளை 3 பைகளில் செகந்திராபாத்துக்கு எடுத்துச் சென்றார்.

இவர், ஆம்னி பேருந்து ஒன்றில் பயணம் செய்தார். அந்த பேருந்து நேற்று முன் தினம் இரவு கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் இரவு உணவுக்காக நிறுத்தப்பட்டது. வீரமணி, ஓட்டலுக்கு சென்று விட்டு பேருந்துக்கு திரும்பியபோது 10 கிலோ வெள்ளி நகைகள் வைக்கப்பட்டிருந்த ஒரு பை மாயமாகி இருந்தது. அந்தப் பையில் இருந்த வெள்ளி நகைகளின் மதிப்பு ரூ.5.25 லட்சம்.திருட்டு தொடர்பாக குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் வீரமணி புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸார் வெள்ளி நகையை பையுடன் திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT