Regional01

தமிழக முதல்வரைக் கண்டித்து மறியல்; திருச்சி, கும்பகோணத்தில் 87 பேர் கைது

செய்திப்பிரிவு

7 சாதி உட்பிரிவுகளை ஒருங் கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணைப் பிறப்பிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதாக முதல்வர் பழனிசாமி அண்மையில் அறிவித் தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நேற்று கோவையில் இருந்து மயிலாடு துறை சென்ற சிறப்பு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட் டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 52 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல, கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே, அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பு சார்பில் வெள்ளாளர் முன்னேற்றக் கழக ஒன்றிய இளைஞரணி செயலாளர் சரவணன் பிள்ளை தலைமையில் நேற்று மறியலில் ஈடுபட்ட 35 பேரை கும்பகோணம் கிழக்கு போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT