அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சுத்தமல்லி, புரந்தான், கோவிந் தபுத்தூர், சாத்தம்பாடி, முட்டு வாஞ்சேரி கிராமங்களை சேர்ந்த மக்கள் கனமழையால் பாதிக்கப் படாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரியலூர் ஆட்சியர் த.ரத்னா தலைமையில் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் அரிசி, வேட்டி, சேலை, பாய், போர்வை மற்றும் உணவு ஆகியவற்றை வழங்கினார்.