அம்பேத்கரின் 64-வது நினைவு தினத்தையொட்டி வேலூரில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம். அடுத்த படங்கள் : ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கர் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கர் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய ஆட்சியர் சிவன்அருள். கடைசிப்படம்: தி.மலையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான எ.வ.வேலு. 
Regional02

அம்பேத்கரின் 64-வது நினைவு தினம்

செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் அம்பேத்கரின் 64-வதுநினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கும், உருவச்சிலைக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு, வேலூர் நகர் பகுதியில் உள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் சண்முகசுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகன், ஆதி திராவிடர் நல விழிக்கண் மற்றும் கண்காணிப்பு அலுவலர் ரமேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை

திருப்பத்தூர்

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன்ராஜசேகர், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் பூங்கொடி, அலுவலக மேலாளர் பாக்கியலட்சுமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வி.சி. கட்சியினர் மரியாதை

SCROLL FOR NEXT