திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 அணைகளுக்கும் நீர் வரத்து உள்ளதால், அணைகளின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.
தி.மலை மாவட்டத்தில் மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று காலை நிலவரப்படி வந்தவாசியில் 12.10 மி.மீ., மழை பெய்துள்ளது. ஆரணியில் 6.80, செய்யாறில் 3, செங்கத்தில் 3.80, ஜமுனாமரத்தூரில் 7.40, சேத்துப்பட்டில் 1, வெம்பாக்கத்தில் 10.3, மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 3.70 மி.மீ., மழை பெய்துள்ளதாக பதிவாகி உள்ளது.
அதே நேரத்தில் திருவண்ணா மலை, போளூர், தண்டராம்பட்டு, கலசப்பாக்கம், கீழ்பென் னாத்தூர் ஆகிய பகுதிகளில் ஓரளவு மழை பெய்துள்ளது.
சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து
உபரிநீர் வெளியேற்றம்
62.32 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம், 57 அடியாக தொடர்ந்து ஒரு வாரமாக பராமரிக்கப்படுகிறது. அணையில் 233 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.