மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே செம்மினிபட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன். மனைவி ராணி (31). முத்துகிருஷ்ணன் (3), ராமகிருஷ்ணன் (1) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
ராணி, ராமகிருஷ்ணன்நேற்று முன்தினம் இரவில் சீனிவாசன், மனைவி, மகன்கள் 4 பேரும் இருசக்கர வாகனத்தில் வாடிப்பட்டிக்கு சென்றனர்.
அப்போது, வாடிப்பட்டி யிலிருந்து பூச்சம்பட்டிக்குச் சென்ற மினி பஸ், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சீனிவாசன், மனைவி ராணி, மகன்கள் முத்துகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். இதில் ராணியும், மகன் ராமகிருஷ்ணனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் மினி பஸ் ஓட்டுநரைக் கைதுசெய்யக்கோரி வாடிப்பட்டி காவல் நிலையம் முன் நேற்று முன்தினம் இரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் சமயநல்லூர் டிஎஸ்பி ஆனந்த ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின் ஆகியோர், மறிய லில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து ஓட்டுநர் தாதம்பட்டியைச் சேர்ந்த குமரேசனைக் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.