பெங்களூருலிருந்து மதுரைக்கு எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றிக்கொண்டு வந்த கன்டெய்னர் லாரியை ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஹஃபீஜ் (44) என் பவர் ஓட்டி வந்தார். நேற்று பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள கென்னட் ரோடு சிக்னல் அருகில் வரும்போது சாலையோரம் சேறும் சகதியுமாக இருந்ததால் லாரியின் டயர்கள் சிக்கிக்கொண்டன.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக லாரியை இயக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். தொடர்ந்து லாரியை இயக்கு வதற்கு முயற்சி செய்தபோது ஏற்பட்ட பதற்றத்தாலும், மன அழுத்தத்தாலும் மார டைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.