Regional01

மதுரையில் மாற்று திறனாளிக்கு நலத்திட்ட உதவிகள்

செய்திப்பிரிவு

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம், ஆழ்துளைக் கிணறு திறப்பு, பார்வையிழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை அருகே தென்பழஞ்சி புதுப்பட்டியில் நடைபெற்றது.

மாவட்டக் குழந்தைகள் நலக்குழு, ஏஞ்சல் ஹோம் ஆப் உமன் டிரஸ்ட், பார்வையற்றோர் மறுவாழ்வு நலச் சங்கம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா தலைமை வகித்தார். மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி முன்னிலை வகித்தார்.

இதில் திருமங்கலம் டிஎஸ்பி வினோதினி, மாவட்ட குழந் தைகள் பாதுகாப்பு அலு வலர் கணேசன், குழந்தைகள் நலக் குழுத் தலைவர் விஜயசரவணன், குழந்தைகள் நலக் குழு உறுப்பினர்கள் பாண்டியராஜா, சண்முகம், சாந்தி உள்ளிட்டோர் பேசினர்.

இவ்விழாவில் எல்.சண்முகம், எம்.ஆர்.சாந்தி ஆகியோருக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT