முன்னாள் முதல்வர் ஜெயல லிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் அவரது உருவப் படத்துக்கு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதிமுக சார்பில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் விவி.ராஜன் செல்லப்பா பேசுகையில், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. வேளாண் சட்டத்தில் தமிழக விவசாயிகளுக்கு சந்தேகம் இருந்தால் அவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று ஏற்கெனவே தமிழக முதல்வர் கூறியுள்ளார் என்றார்.
மாநகர அதிமுக, புறநகர் மேற்கு அதிமுக சார்பில் அந்தந்த பகுதியில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாவட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.