சிவகங்கை பஸ் நிலையம் அருகே, ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் பாஸ்கரன் தலைமையிலான அதிமுகவினர். 
Regional02

சிவகங்கையில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு

செய்திப்பிரிவு

சிவகங்கை பஸ் நிலையம் நிலையம் அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, அவரது உருவப் படத்துக்கு அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு கதர் கிராமத் தொழில்கள் நல வாரியத் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமை வகித்தார். மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கருணாகரன், ராமநாதபுரம் - சிவகங்கை மாவட்ட கூட்டுறவு அச்சக சங்கத் தலைவர் சசிகுமார், ஒன்றியச் செயலாளர் செல்வமணி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜா, முன்னாள் நக ராட்சித் தலைவர் அர்ச்சுனன் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் சிவகங்கை நகரின் முக்கிய வீதிகளிலும், ஆங்காங்கே ஜெயலலிதாவின் உருவப் படத் துக்கு கட்சியினர் அஞ்சலி செலுத் தினர்.

SCROLL FOR NEXT