Regional02

இளைஞர் தற்கொலை

செய்திப்பிரிவு

விருதுநகர் முத்தாள் நகர் பாலன் தெருவைச் சேர்ந்த அல்லிராஜ் மகன் செந்தூர்கார்த்திக் (19). கடந்த ஆண்டு தென்காசியில் நடந்த ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்று தோல்வி அடைந்தார். அப்போதிலிருந்து மன வருத்தத்தில் இருந்தார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் கோவையில் நடைபெறவுள்ள ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், தன்னால் சரியாக ஓட முடியவில்லை என்பதால் மனவருத்தத்தில் இருந்து வந்த செந்தூர்கார்த்திக் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாண்டியன் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT