மதுரை தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் செய்த அனைத்து தொழிற்சங்கத்தினர். படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
Regional03

தொழிலாளர் திருத்த மசோதாவை வாபஸ் பெறக் கோரி மதுரையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள், தொழிலாளர் திருத்த மசோதாக்கள் ஆகியவற்றை திரும்பப்பெற வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் மதுரை மீனாட்சி பஜார் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதற்கு எல்பிஎப் மாவட்டத் தலைவர் சி.கருணாநிதி தலைமை வகித்தார். இதில் சிஐடியூ மாவட்ட துணைத் தலைவர் ரா.லெனின், ஐஎன்டியூசி டி.ராஜசேகரன், எச்.எம்.எஸ். பொதுச்செயலாளர் வி.பாதர்வெள்ளை, சிஐடியூ மாவட்டச் செயலாளர் ஆர்.தெய்வராஜ் , எம்எல்எப் மாநில இணைப் பொதுச் செயலாளர் எஸ். மகபூப்ஜான், டிடிஎஸ்எப் நிர்வாகி எஸ்.முருகேசன், எஸ்டியூ நிர்வாகி சிக்கந்தர், ஏஏஎல்எல்எப் நிர்வாகி சங்கையா, டியுசிசி நிர்வாகி மீன்பாண்டி, ஏஐசிசிடியு நிர்வாகி குகானந்தன் ஆகியோர் பேசினர்.

ஏஐடியூசி மாவட்டப் பொதுச் செயலாளர் எம்.நந் தாசிங் நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வேளான் சட்டத்தை எதிர்த்து

அப்போது பிரதமர் மோடி, தொழில் அதிபர்கள் அம்பானி, அதானி ஆகியோரது உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. இதைக் காவல் துறையினர் தடுக்க முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினரைக் கண்டித்து விவசாயிகள் மதுரை-மேலூர் சாலையில் மறியல் செய்தனர்.

இதேபோல் இடது சாரி கட்சிகளின் மதுரை புறநகர் மாவட்டக் குழு சார்பில் அவனி யாபுரம், திருமங்கலம், கள்ளிக்குடி ஆகிய இடங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் நடந்தது.

இதில் கலந்து கொண்ட நூறுக் கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT