இந்நிலையில் இக்கால்வாய் தனது இடத்தில் செல்வதாகக் கூறி ராஜகம்பீரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தூர்வாரும் பணியைத் தடுத்து நிறுத்தினார். இதைக் கண்டித்து, கீழமேல்குடி கிராம மக்கள் ராஜகம்பீரம் அருகே மதுரை - ராமேசுவரம் நான்குவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
போலீஸார், பொதுப்பணித் துறையினர் கிராம மக்கள் மற்றும் தனி நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிரச்சினைக்குரிய இடத்தைத் தவிர்த்து மற்ற இடங்களில் தூர்வார முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.