மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் டிச. 12-ல் காணொலிக் காட்சி மூலமாக குறைதீர்க் கூட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் என்.கோபால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுரை வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் கரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக டிச.12-ல் காணொலிக் காட்சி மூலம் குறைதீர்க் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த காணொலி குறைதீர்க் கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் மொபைல் போனில் கூகுள்பிளே ஸ்டோர் வழியாக சிஸ்கோ வெபக்ஸ் மீட்டிங் செயலியை பதிவிறக்கம் செய்து, தங்கள் செல்போன் எண்ணுடன் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்துக்கு ro.madurai@epfindia.go.in என்ற மின்னஞ்சல் வழியாக உடனடியாக அனுப்ப வேண்டும்.
இதையடுத்து மண்டல அலு வலகத்திலிருந்து காணொலிக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான தொடர்பு எண் தெரிவிக்கப்படும். இந்த எண்ணைப் பயன்படுத்தி காணொலிகுறைதீர்க் கூட்டத்தில் பங்கேற்கலாம். இது தொடர்பான தொழில்நுட்பச் சந்தேகங்களுக்கு 9384184719 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேட்கலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.