பாசனத்துக்கு நீர் திறப்பை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணை நீர்மட்டம் 102.51 அடியாக உயர்ந்தது.
காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 6,116 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 5,976 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்கும், கால்வாய் பாசனத்துக்கும் விநாடிக்கு தலா 500 கனஅடி திறந்துவிடப்பட்டுள்ளது.
அணை நீர்திறப்பை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 102.00 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 102.51 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 68.13 டிஎம்சி-யாக உள்ளது.