எடப்பாடி அடுத்த கொங்கணாபுரத்தில் நேற்று கூடிய சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.
கொங்கணாபுரத்தில் வாரம்தோறும் சனிக்கிழமை கால்நடை சந்தை நடந்து வருகிறது. சந்தைக்கு வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் கால்நடைக வளர்ப்போர் பங்கேற்பார்கள். நேற்று (5-ம் தேதி) நடந்த சந்தையில் கால்நடை வளர்ப்பவர்கள் 5 ஆயிரம் ஆடுகள், 2 ஆயிரம் கோழி, 100 டன் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையும், 20 கிலோ எடை கொண்ட ஆடுகள் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரையும் விற்பனையானது. குட்டி ஆடுகள் ரூ.1,400 முதல் ரூ.1,900 வரை விற்பனையானது. பந்தய சேவல்கள் ரூ.900 முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனையானது. காய்கறிகள் மற்றும் ஆடு, கோழி, புறாக்கள் என சந்தையில் ரூ.3 கோடி மதிப்புக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.