Regional03

வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி சேலத்தில் உருவப் பொம்மை எரிக்க முயன்ற 26 பேர் கைது

செய்திப்பிரிவு

புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, சேலத்தில் பிரதமரின் உருவப் பொம்மையை எரிக்க முயன்ற விவசாய சங்க கூட்டு குழுவைச் சேர்ந்த 26 பேரை போலீஸார் கைது செய்தனர்.

புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் விவசாய சங்க கூட்டுக் குழு சார்பில் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தலைமை தபால் நிலையம் எதிரில் மறியல் போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு, தமிழக விவசாய சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, அகில இந்திய விவசாயிகள் மகாசபை மாவட்ட செயலாளர் அய்யந்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட் டவர்கள் பிரதமரின் உருவப் பொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அதை தடுத்து, 26 பேரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT