Regional01

மழை சேத பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை யால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆட்சியர் த.ரத்னா நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

செந்துறை பெரிய ஏரி, ஆணைவாரி ஓடை, உப்போடை மற்றும் மழைநீர் சூழ்ந்துள்ள நைனார்குடிகாடு பகுதி, அசாவீரன்குடிகாடு தட்டான்குறிச்சி தெரு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட ஆட்சியர் த.ரத்னா, ஏரிக்கு வரும் நீர்வரத்து குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, நீர்வரத்தை கண்காணிக்கவும், உபரிநீரை பாதுகாப்பான முறையில் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களை பாதிக்காத வண்ணம் வெளியேற்றவும் அலு வலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT