திருச்சி தென்னூர் புதுமாரி யம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணி(75). மண் குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இரு தினங் களுக்கு முன் திருச்சியில் பெய்த கனமழையின்போது இவரது வீட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கிய மணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். இதுகுறித்து தில்லைநகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
மூதாட்டி உயிரிழப்பு